சேப்பாக்கம் மைதானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

 
ச் ச்

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு இரண்டாவது முறையாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Cheppakkam

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுவருகின்றனர். 

கடந்த சில நாட்களுக்கு முன் இதேபோல் சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பாகிஸ்தான் நாட்டை குறிப்பிட்டு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது. ஐபிஎல் போட்டி நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் எனவும், ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டது. ஐபிஎல் நடத்தினால் ரத்த ஆறு ஓடும் என மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது.