பூத் கமிட்டி பணிகள் - ஈபிஎஸ் அதிரடி உத்தரவு

 
eps

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது.

EPS

அதிமுக மாவட்ட செயலாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது. அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்  பூத் கமிட்டி அமைப்பு, இளைஞர்-இளம் பெண்கள் பாசறை அமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது மாவட்டங்களில் கட்சி பொறுப்புகளில் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்னைகளுக்கு கட்சி சார்பில் குரல் கொடுக்க வேண்டும், பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் சுணக்கம் இருக்கக் கூடாது. இதை சரியாக செய்யாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், டிசம்பர் 3-ம் தேதிக்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முடிக்க வேண்டும், சுற்றுப்பயணத்திற்கு முன்பாக அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும், டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் அனைத்து முகவர் பட்டியலையும் தலைமைக்கு அனுப்ப வேண்டும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.