நாடாளுமன்ற இரு அவைகளும் பகல் 12 வரை ஒத்திவைப்பு..!!
எதிர்கட்சிகளிம் தொடர் முழக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் பகல் 12 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ம் தேதி தொடங்கிய நிலையில், எதிர்கட்சிகளின் தொடர் முழக்கத்தாலும், அமளியாலும் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்த விவாதங்கள் நடைபெறாமலே இருந்து வருகின்றன. இந்த நிலையில் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் காலை 11 மணிக்கு மழைக்கால கூட்டத்தொடர் கூடியது. அப்போது பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்படவே, நாடாளுமன்ற இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ர்ம்ப் மத்தியஸ்தம் செய்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இன்று பிறபக,ல் 12 மணியளவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவையில் பேசவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


