தாயின் ரூ.15,000 கடனுக்கு அடமானம் வைக்கப்பட்ட சிறுவன் பாலாற்றில் புதைப்பு

 
ச் ச்

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்கிற 9வயது சிறுவனை அவரது பெற்றோர் வெண்பாக்கம் பகுதியில் தங்கியிருந்து வாத்து மேய்ப்பவர்களிடம் விட்டு சென்ற நிலையில் காஞ்சிபுரம் பாலாற்றில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கூடூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் ஏனாதி-அங்கம்மாள் தம்பதியினர். இவர்கள் ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியை சேர்ந்த முத்து-தனபாக்கியம் தம்பதியினரிடம் கடனாக 15,000 ரூபாய் பெற்றிருக்கின்றனர். இத்தம்பதியிடம் வாங்கிய கடனுக்கு குத்தகையாக தனது 9 வயது குழந்தையான வெங்கடேஷை இவர்களுடன் 10 மாதங்கள் வாத்து மேய்க்க அனுப்பியதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் முத்து-தனபாக்கியம் தம்பதியினர் காஞ்சிபுரத்தை அடுத்திருக்க கூடிய வெண்பாக்கம் பகுதியில்‌ தங்கியிருந்து வாத்து மேய்த்துவரும் நிலையில் கடந்த 30 நாட்களுக்கு முன்பே சிறுவனுக்கு மஞ்சள் காமாலை இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையால் வெண்பாக்கம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமைன ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக கூறப்படுகிறது. இதனையெடுத்து சிறுவன் மாற்று சமுதாயம் என்பதால் ஏதேனும் பிரச்சனையாக கூடும் என எண்ணி காஞ்சிபுரம்  பாலாற்றில் முத்து அவரது மனைவி தனபாக்கியம் இவர்களது மகன் ராஜசேகர் ஆகியோர் குழி தோண்டி புதைத்துள்ளனர்.

இந்த நிலையில் குத்தகை மாதமான 10 மாதங்கள் முடிவுற்ற குழந்தை மீட்க பெற்றோர் முதல்முறை வந்த போது, குழந்தையை காட்டாமல் பணம் கொடுத்திட கூறி திருப்பி அனுப்பியதாக கூறப்படும் நிலையில், சிறுவன் குறித்து பெற்றோர் விசாரிக்க  எவ்வித தகவலும் இக்குடும்பத்தார் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் சிறுவனின் பெற்றோர், ஆந்திர மாநிலம் சித்தியவேடு போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் முத்து, தனபாக்கியம், ராஜசேகர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் குழந்தை உடல்நலம் சரியில்லாமல் உயிரிழந்ததும், காஞ்சிபுரம் பாலாற்றில் புதைக்கப்பட்டது குறித்தும் தெரியவந்த நிலையில் ஆந்திரா மாநிலம் புத்தூர் டிஎஸ்பி ரவிகுமார் தலைமையிலான போலீசார், காஞ்சிபுரம் தாலுகா காவல்நிலைய போலீசாரின் உதவியுடன் புதைக்கப்பட்ட சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் குழந்தை மஞ்சள் காமாலையால் தான் உயிரிழந்ததா என வெண்பாக்கம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனை சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். குத்தகைக்கு விடப்பட்ட சிறுவன் காஞ்சிபுரம் பாலாற்றில் உயிரிழந்த நிலையில் புதைக்கப்பட்ட நிலையில் இரு மாநில போலீசார் குவிக்கப்பட்டு மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.