உறியடிக்கும் நிகழ்வின் போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
உறியடிக்கும் நிகழ்வின் போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
பரமக்குடியில் உறியடிக்கும் நிகழ்வில் மின்சாரம் தாக்கி ஏழு வயது சிறுவன் உயிரிழந்த நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மேலாய்க்குடி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று உறியடிக்கும் வைபவம் நடைபெற்றது. இதில் பானையை உடைத்த பின்பு அதிலிருந்து பணத்தை எடுக்க முயன்ற போது பானை கட்டப்பட்டிருந்த கம்பி அருகில் இருந்த மின்சார கம்பிகள் மீது சாய்ந்ததில் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் கபிலேஷ்(7), சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
அவரது சகோதரர் கோகுல ராகுல் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். உறியடிக்கும் நிகழ்வின் போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தின் நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. மின்சாரம் தாக்கியவுடன் கம்பியை பிடித்தவாறு சிறுவன் கபிலேஷ் உயிரிழக்கிறான். அதேபோல் அருகில் இருந்தவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக தரையில் சாய்கின்றனர். இந்த சிசிடிவி காட்சிகள் நெஞ்சை பதவிக்கும் விதமாக உள்ளது. இச்சம்பவம் குறித்து எமனேஸ்வரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.