மரத்தில் சிக்கி இருந்த காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து பலி

 
ச் ச்

சென்னை அடுத்த சென்னை ஆவடியில் மரத்தில் சிக்கி இருந்த காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன் (10) கார்த்திக் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தான்.

ஆவடி, ராமலிங்கபுரம், ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (40). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி எமிலியம்மாள் (36). இவர்களுக்கு மூன்று மகள் மற்றும் ஒரு மகன் உள்ளான். அவரது மகன் கார்த்திக் (10). இவன் ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். கார்த்திக், நேற்று மதியம், தாய் எமிலியம்மாள் உடன் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பிரார்த்தனை கூட்டத்திற்கு சென்றான். எமிலியம்மாள் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்க, கார்த்திக் இரண்டாவது மாடியில் சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது, மரத்தில் சிக்கி இருந்த காற்றாடியை எடுக்க முயன்றபோது திடீரென மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளான். எமிலியம்மாள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி கார்த்திக் உயிரிழந்தான். ஆவடி போலீசார், கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்துவருகின்றனர்.