இனி எல்லா ஊருக்கும் புது பஸ்...ரூ.184 கோடியில் 543 புதிய பேருந்துகள் கொள்முதல்

 
ச் ச்

போக்குவரத்து கழகங்களுக்கு 184 கோடியில் 543 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான பணி ஆணை அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

16 மணி நேர பணி நேரம், அழுத்தத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும்  நடத்துநர்கள் - தீர்வு என்ன? - BBC News தமிழ்

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக பேருந்துகளை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி தாழ்தள பேருந்துகள், பிஎஸ்6 வகை கொண்ட டீசல் பேருந்துகள், மின்சார பேருந்துகள், மினி பேருந்துகள் என்று 2025-26ல் மட்டும் 3,000 பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட உள்ளது. இதில் 543 பேருந்துகளை வாங்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெண்டர் கோரப்பட்டு இருந்தது. இந்நிலையில், 184 கோடியில் 543 புதிய பேருந்துகளை விநியோகம் செய்வதற்கான பணி ஆணை அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதன்படி, 543 பிஎஸ் 6 வகை கொண்ட புதிய டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்ய இந்த பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த 6 மாதத்திற்கு இந்த பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் மொபசல் பேருந்துகளாக இந்தப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.