#BREAKING ஆஸ்கருக்கு செல்லும் 6 தமிழ்த் திரைப்படங்கள்!

 
Oscar Oscar


2025ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு  இந்தியா சார்பில்  6 தமிழ் திரைப்படங்கள்  பரிந்துரைக்கப்பட்டுள்ளன.  

Oscar

உலக அளவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக ஆஸ்கர்  கருதப்படுகிறது.  ஒவ்வொரு ஆண்டும்  சிறந்த திரைப்படங்ளை தேர்வு செய்து  ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும். அதன்படி இந்தியா சார்பில் 28 திரைப்படங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அதிலும் 6 தமிழ் திரைப்படங்கள்  ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றன. விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’, சூரியின்  ‘கொட்டுக்காளி’, ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, மாரி செல்வராஜின் ‘வாழை’,ப.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்கலான்’ மற்றும் ‘ஜமா’ ஆகிய  படங்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Image

6 தமிழ் திரைப்படங்கள், 10 இந்தி திரைப்படங்கள், 5 மலையாளம், 3 மராத்தி மற்றும் 3 தெலுங்கு திரைப்படங்கள் உள்பட இந்தியா சார்பில் 28 திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒரியா மொழி படம் ஒன்றையும் ஆஸ்கருக்கு அனுப்பப்பட உள்ளது. மேலும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக ‘லபட்டா லேடீஸ்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது.