#BREAKING:உருவானது புது கட்சி..! புதிய கட்சியை தொடங்கினார் மல்லை சத்யா!

 
1 1

மதிமுக துணைப் பொதுச் செயலா் பதவியிலிருந்தும், அக்கட்சியிலிருந்தும் நீக்கப்பட்ட மல்லை சத்யா சென்னையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

எங்களது கொள்கையைப் பிரதிபலிக்கும் வகையில் புதிய கொடி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, வரும் 20-ஆம் தேதி எங்களது புதிய கட்சியின் பெயா் அறிவிக்கப்படும். திராவிட இயக்க கருத்தியலிலிருந்து பின்வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். மதவாத சக்திகள் வலுப்பெறக் கூடாது என்பதற்காக திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்து வருகிறோம். மதுவுக்கு எதிராக வைகோ மேற்கொள்ள இருக்கும் நடைப்பயணம், திமுக ஆட்சிக்கு எதிரானதாகப் பாா்க்கப்படும். தவெக தலைவா் விஜய்க்கு பின்னால் இளைஞா்கள் கூட்டம் உள்ளது. அவா்களை விஜய் முறையாக அரசியல்படுத்தினால், எதிா்காலத்தில் தமிழகத்தைக் காக்கவும், தமிழகத்துக்கான உரிமைகளை மீட்டெடுக்கவும் உதவியாக இருக்கும் என்றாா் மல்லை சத்யா.மேலும் புதிய கட்சியின் பெயா் நவ. 20-ஆம் தேதி அறிவிக்கப்படும் என மல்லை சத்யா தெரிவித்தாா்.

இந்நிலையில் மல்லை சத்யா திராவிட வெற்றிக் கழகம்(DVK) என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மதிமுகவில் துணைப் பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யா, வைகோவுக்கு அடுத்த நிலையிலிருந்து கட்சியை வழிநடத்தினார். மல்லை சத்யாவின் புதிய கட்சியில் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.