#BREAKING : நடிகை ராதாவின் தாயார் காலமானார்..!
Nov 27, 2025, 12:10 IST1764225639271
நடிகைகள் அம்பிகா, ராதா ஆகியோரின் தாயார் சரசம்மா நாயர் உடல்நலக்குறைவால் காலமானார் அவருக்கு வயது 87.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவரின் இறுதிச்சடங்கு திருவனந்தபுரம் அருகே உள்ள அவர்களது சொந்த ஊரான கல்லாராவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலில் அதீத ஆர்வம் கொண்டிருந்த சரசம்மா, 2014-ம் ஆண்டு வரை கேரளா மகிளா காங்கிரஸின் தலைவராக இருந்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


