#BREAKING: கிராம உதவியாளர் நியமனம்: வயது வரம்பு உயர்வு..!

 
Q Q
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா , வருவாய் நிர்வாக ஆணையருக்கு இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
அதில் கிராம உதவியாளர் பணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. (SSLC) தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், எஸ்.எஸ்.எல்.சி. தகுதிக்குக் குறைவான கல்வித் தகுதியுடைய, ஆனால் கல்வியில் பின்தங்கிய (destitute) சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு, குறைந்தபட்ச கல்வித் தகுதியைக் காட்டிலும் அதிகபட்ச வயது வரம்பில் ஐந்து ஆண்டுகள் சலுகை அளிக்கப்படும்.
அந்தவகையில் பல்வேறு பிரிவினருக்கான அதிகபட்ச வயது வரம்பு பின்வருமாறு உயர்த்தப்பட்டுள்ளது:
அதன்படி பொதுப் பிரிவினர் (OC/GT): 30 வயதிலிருந்து 32 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.
பி.சி., எம்.பி.சி., மற்றும் டி.என்.சி.: 35 வயதிலிருந்து 39 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.
எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஆதரவற்ற விதவைகள்: 35 வயதிலிருந்து 42 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வயது வரம்பு உயர்வு, கொரோனா தொற்றால் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, நேரடியாக நியமனம் செய்யப்படுபவர்களுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பு அளிக்கப்பட்டதன் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் இந்த புதிய விதிகளின்படி நியமனப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.