#BREAKING : அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு..!!
கறிக்கோழி பிரச்சினை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். நேரமில்லா நேரத்தில் இதுகுறித்து விவாதிக்க நேரம் கேட்டனர். மேலும் இதனை உடனே விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
நேரமில்லா நேரத்தில் விவாதிக்க வேண்டும் என்றால் முன் அனுமதி பெற வேண்டும். கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேச அனைவருக்கும் அனுமதி கொடுக்க முடியாது. சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பதில் பெறப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சபாநாயகர் கூறினார். கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள மறுத்ததால் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விவசாய பிரச்சினை சார்ந்த விவாதத்தை எழுப்ப தான் நேரம் கேட்கிறோம். பேரவையில் சில நிமிடம் நேரம் கொடுப்பதில் என்ன பிரச்சினை? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கான பதில் தயாராகி வருகிறது. நாளைய தினம் அதிகாரிகளுடன் கலந்து பேசி, பதில் தயார் செய்துகொண்டு சம்பந்தப்பட்ட அமைச்சர் பதில் அளிப்பார். சபாநாயகர் கூறிய பிறகும் பிரச்சினை எழுப்புவது நேரத்தை வீண்டிக்கும் செயல் என்று கூறினார்.
இந்த நிலையில் முதல்-அமைச்ரின் பதிலை ஏற்க மறுத்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
“எதிர்க்கட்சிகளின் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கான பதில் தயாராகி வந்ததும், விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்#TNAssembly | #EdappadiPalaniswami | #ADMK | #MKStalin pic.twitter.com/MAbgIDSB0h
— PttvOnlinenews (@PttvNewsX) January 22, 2026


