#BREAKING : மகளிர் உரிமைத்தொகை நாளை வராது - முதல்வர் விஜய் அறிவிப்பு..!
கலைஞர் மகளிர் உரிமை தொகையால் கிட்டத்தட்ட 1.15 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயன் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் இந்த சிறப்பான திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
மாதம்தோறும் தமிழகத்தின் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய அரசு பொறுப்பேற்று இருப்பதால், அத்தொகை வருமா? வராதா என்ற அச்சம் மக்களிடையே எழுத்துள்ளன. இந்த நிலையில், மகளிர் உரிமை தொகை தொடருமா? அது குறித்தான தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முடிவின் என்ன என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை மறுசீரமைப்பு செய்ய உரிய அவகாசம் தேவைப்படுவதால் மே மாதத்துக்கான உரிமைத் தொகை பயனாளிகள் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என்றும் நாளை மே மாதத்திற்கான உரிமைத்தொகை வராது என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் கொடுத்த வாக்குறுதி :
மறுபக்கம் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் வாக்குறுதியில் மகளிருக்கு மாதம் ரூ. 2,500 வழங்குவதாக அறிவித்திருந்தது. தற்போது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. அக்கட்சி தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். ஆனால் அவர் இன்னும் மகளிருக்கான உதவி தொகைக்கான திட்டத்தில் கையெழுத்திடவில்லை.
முதலமைச்சர் விஜய் மே 10 அன்று பதவியேற்றப்போது, ஏற்கனவே இந்த திமுக அரசு சுமார் ரூ. 10 லட்சம் கோடி கடன் வைத்து விட்டதாகவும், அது தொடர்பான வெள்ளை அறிக்கையை விரையில் வெளியிடுவதாகவும் கூறினார். அதோடு, தனக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுக்குமாறும் அவர் பொதுமக்களிடன் வேண்டுகோள் விடுத்தார். இதன் காரணமாக அவர் கொடுத்திருந்த மகளிருக்கான உதவி தொகையை செயல்படுத்த காலம் எடுக்கும் என தெரிகிறது.

