#BREAKING : மார்ச் 2ம் தேதி முதல் 26ம் தேதி வரை 12ம்வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் அன்பில் மகேஷ்..!

 
1 1

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை 27,783 தனித்தேர்வர்கள் உட்பட மொத்தம் 8,27,475 மாணவர்கள் எழுத உள்ளனர். அதேபோல், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 11-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இது குறித்த விரிவான தகவல்களைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 26,196 தனித்தேர்வர்கள் உட்பட மொத்தம் 9,09,002 மாணவர்கள் எழுதுகின்றனர். தேர்வுகள் முறையாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்யப் பள்ளிக்கல்வித்துறை அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது. மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றித் தேர்வுகளை எதிர்கொள்ளத் தேவையான ஆலோசனைகளும், தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement