#BREAKING : இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த நீதிமன்றம் தடை!
Updated: Nov 21, 2025, 12:29 IST1763708387360
சமூக வலைதளங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை. இளையராஜா சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
வணிக நோக்கில் தனது புகைப்படத்தை நிறுவனங்கள் பயன்படுத்துவதற்கு தடை கேட்டு இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் மீதான விசாரணை இன்று (நவ. 21) நடைபெற்றது. இதில், இளையராஜா புகைப்படத்தை சமூக வலைதளங்கள், யூ டியூப் சேனல்கள், தனியார் மியூசிக் நிறுவனங்கள் பயன்படுத்த நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இது குறித்து சோனி மியூசிக் உள்ளிட்ட நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு


