#BREAKING : டிட்வா புயலால் தமிழ்நாட்டில் 4 பேர் உயிரிழப்பு..!

 
1 1

வங்கக்கடலில் நிலவி வரும் டிட்வா புயலின் வலுவிழந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சுட்டிக் காட்டப்படுகிறது. இது சென்னை, புதுச்சேரி கடற்கரையை நோக்கி நெருங்கி வருவதால் மழை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிற்பகல் 1 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை கொட்டி தீர்க்க வாய்ப்புள்ளது. அதுவும் விட்டு விட்டு கொட்டி தீர்க்கக் கூடும் என்கின்றனர்.


டிட்வா புயல் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் இதுவரை 4 பேர் உயிரிழந்ததாக பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது. மேலும் டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் இதுவரை 582 கால்நடைகள் உயிரிழந்துள்ளன என்றும் புயல் காரணமாக தமிழ்நாட்டில் இதுவரை 1,601 வீடுகள் சேதம் அடைந்துள்ளன என்றும் பேரிடர் மேலாண்மை துறை குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.