#BREAKING : மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு..!! 3% அகவிலைப்படி உயர்வு..!
மார்ச் 2025 இல், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை மத்திய அரசு 2 சதவீதம் உயர்த்தியது. இந்த உயர்வு ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வந்தது, எனவே அவர்களுக்கு முந்தைய மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் கிடைத்தது. இந்த மாற்றத்திற்குப் பிறகு, அகவிலைப்படி/அகவிலை நிவாரண விகிதம் 55 சதவீதமாக உயர்ந்தது. இந்த கூடுதல் தொகை பணவீக்கத்திற்கு எதிராக மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்கியது. குடும்பங்கள் தினசரி செலவுகளை நிர்வகிக்க இது உதவியது.
இந்நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது
தீபாவளி பரிசாக, அகவிலைப்படி(DA) உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, DA 55%-ல் இருந்து 58% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை 1-ம் தேதியில் இருந்து கணக்கிட்டு நிலுவையுடன் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு DA உயர்வு வழங்கப்பட உள்ளது.


