#BREAKING : தவெகவில் சீட் வாங்கிய தூசி மோகனை நீக்கினார் எடப்பாடி பழனிசாமி..!!

 
Q

அதிமுகவில் சீட் மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த முன்னாள் MLA தூசி மோகன், தற்போது விஜயின் தவெக-வில் இணைந்தார்.அவ்வாறு இணைந்த தூசி கே.மோகனுக்கு செய்யாறு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தூசி மோகன் கடந்த 2016 ஆம் ஆண்டு செய்யாறு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். கடந்த 2021 ஆம் ஆண்டு அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் திமுக வேட்பாளர் ஜோதி வென்றார். இதனால் 2026 தேர்தலில் தனக்கு வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இவர் அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்தார்.

இந்த நிலையில் தூசி கே. மோகனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார். அவருடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவின் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து தூசி K.மோகன் நீக்கப்படுவதாக EPS அறிவித்துள்ளார். அந்தப் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் முக்கூர் N.சுப்பிரமணியன் நியமிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.