#BREAKING : வாக்கு எண்ணும் மையத்தில் 'ஜனநாயகன்' படம் பார்த்த ஊழியர் அதிரடி கைது!

 
1

தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கான பொதுத் தேர்தல் 23.04.2026 அன்று 75,064 வாக்குச்சாவடிகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.


வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர், வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் (EVM) வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகளும் (VVPAT). தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் / அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மத்தியப் பார்வையாளர்(கள்) முன்னிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளின்படி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, காப்பறைக்கு இரண்டடுக்கு ஆயுதமேந்திய பாதுகாப்பு (குறைந்தபட்சம் 1 படைப்பிரிவு அளவிலான ஆயுதமேந்திய பாதுகாப்புப் படை), 24x7 கண்காணிப்பு காமிரா முதலிய ஏற்பாடுகளுடன் - வீடியோ பதிவு செய்யப்பட்டு, தொடர்புடைய காப்பறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.


இருப்புக் காப்பிலுள்ள (Reserve) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் (EVM) வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகளும் (VVPAT), இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளின்படி, இருப்புக் காப்பிற்கான காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

காப்பறையின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணிப்பதற்காகத் தங்களின் பிரதிநிதிகளை அனுப்புமாறும், அவர்கள் பாதுகாப்பு வளையத்தின் உள் சுற்றுக்கு வெளியே தங்கி கண்காணிக்காலாம் என, தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் மாவட்டத் தேர்தல் அதிகாரியால் எழுத்து வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்காக காப்பறையின் கண்காணிப்பு காமிரா ஒளிபரப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வாக்கு எண்ணுகை நாளன்று, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் / அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மத்தியப் பார்வையாளர்(கள்) முன்னிலையில், வீடியோ பதிவு செய்யப்பட்டு காப்பறை திறக்கப்படும்.

இந்த சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி முதன்முறையாக போட்டியிட்டுள்ளது. இதனிடையில் தவெக ஆதரவாளர்கள் செய்யும் காரியங்கள் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அப்படி ஒன்று தான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்துள்ளது. அதாவது அங்குள்ள வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் யுவராஜ் என்பவர் அமர்ந்து விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தினை பார்த்துள்ளார். இதனை அவரே சோஷியல் மீடியாவில் புகைப்படமாக பகிர்ந்து, "ஓட்டு பெட்டி வர்ற இடத்தில் கூட நம்ம விஜய் என்ட்ரி தான்" என பதிவிட்டு இருந்தார்.


அவருடைய இந்த பதிவு மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை கிளப்பியது. இணையத்தில் சட்டவிரோதமாக லீக்கான படத்தை வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து பார்த்துள்ளார். இவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தினார்கள். இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து ஜனநாயகன் படத்தினை பார்த்த ஒப்பந்த ஊழியரான யுவராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.