#BREAKING : என்னை போன்றவர்கள் முன்மொழியவில்லை என்றால் இ.பி.எஸ் முதலமைச்சராகி இருக்க முடியாது - செங்கோட்டையன்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சற்று முன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே நான் பேசி வருகிறேன்.அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்த்தால் தான் கட்சிக்கு வெற்றி கிடைக்கும்.2009ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி.உழைத்தவர்களை மறந்துவிட்டு பணக்காரர்களுக்கு எம்.பி சீட் வழங்கியவர் எடப்பாடி பழனிசாமி.
"யார் என்னிடம் பேசினாலும் நடவடிக்கை எடுக்கும் நிலை இன்று உள்ளது, நிர்வாகிகள் நீக்கம் அதிமுகவை பலவீனப்படுத்தும் செயல்.
எந்த சம்பவத்திற்கும் CBI விசாரணை கோரும் EPS, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் CBI விசாரணை கோராதது ஏன்?
என்னை போன்றவர்கள் முன்மொழிந்து முதலமைச்சரானவர் இ.பி.எஸ்.எனக்கு அமைச்சர் பதவி கொடுத்தது இ.பி.எள் தான் என கூறுவது வேதனையாக உள்ளது என்னை போன்றவர்கள் முன்மொழியவில்லை என்றால் இ.பி.எஸ் முதலமைச்சராகி இருக்க முடியாது
கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் எதுவும் செய்யவில்லை என்று கூறுவது மிகவும் வேதனையளிக்கிறது.


