#BREAKING : இபிஎஸ் ஷாக்..! அதிமுகவில் இருந்து விலகிவிட்டதாக முன்னாள் சபாநாயகர் தனபால் அறிவிப்பு..!

 
1

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் காரணமாக கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுகவில் இருந்து முன்னாள் சபாநாயகர் ப.தனபால் விலகியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "அதிமுகவில் இருந்து நான் விலகி நீண்ட நாட்கள் ஆகிறது. என்னை போன்றவர்களை புறக்கணித்ததால் அதிமுகவை இன்று மக்கள் புறக்கணித்துள்ளனர். அதிமுகவில் எனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை, அதிமுகவில் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள். தவெகவில் எனது மகன் அமைச்சராக இருப்பது மகிழ்ச்சி" என்று தனபால் தெரிவித்துள்ளார்.


தனபாலின் மகன் டி.லோகேஷ் தமிழ்செல்வன் த.வெ.க.வில் இணைந்து ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது டி.லோகேஷ் தமிழ்செல்வனுக்கும் த.வெ.க. அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

யார் இந்த பி.தனபால் :

  • அரசியல் பயணம்: 1972-ஆம் ஆண்டு அதிமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே கட்சியில் இருப்பவர்.
  • தேர்தல் வெற்றி: 1977-ஆம் ஆண்டு முதல் முறையாக எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்ககிரி, ராசிபுரம் மற்றும் அவிநாசி ஆகிய மூன்று வெவ்வேறு தொகுதிகளில் வெற்றி பெற்று, மொத்தம் 7 முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
  • பதவிகள்: தமிழக அமைச்சராகவும், சட்டப்பேரவைச் சபாநாயகராகவும் மிக உயர்ந்த பொறுப்புகளை வகித்தவர்.