#BREAKING : பிரபல நடிகரின் மனைவி காலமானார்..!

 
1 1
பிரபல ஹிந்தி நடிகர் மகேஷ் மஞ்சுரேகர். இவர் 1999-ம் ஆண்டு வாஸ்தவ் என்ற ஹிந்தி திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகில் அறிமுகமான இவர், இத்திரைப்படத்தில் பாடல் ஒன்றி நடித்து நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அஸ்திதாகுருக்ஷேத்திர என்ற ஹிந்தி திரைப்படங்களை இயக்கி பிரபலமாகியுள்ளார்.
ஹிந்தி திரைப்படங்களில் இயக்குனராக பணியாற்றிய இவர், நடிகராகவும் அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். இவர் தமிழில் 2013-ம் ஆண்டு வெளிவந்த ஆரம்பம் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் 2017-ம் ஆண்டு வேலைக்காரன் திரைப்படத்தில் ஒரு சிறுகதாபாத்திரத்தில் நடித்த இவர், 2019-ம் ஆண்டு அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
ஹிந்தி திரையுலகில் இயக்குனராக திரையுலக வாழ்க்கையை தொடங்கிய இவர், தற்போது ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மகேஷ் மஞ்ச்ரேக்கரின் முதல் மனைவி தீபா மேத்தா காலமானார். இந்த செய்தியை அவர்களின் மகன் நடிகர் சத்யா மஞ்ச்ரேக்கர் உறுதிப்படுத்தினார் , அவர் தனது தாயின் பழைய புகைப்படத்தையும், ஒரு சிறிய ஆனால் நெகிழ்ச்சியான குறிப்பையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். “நான் உங்களை மிஸ் செய்கிறேன் அம்மா,” என்று அவர் எழுதினார்.
மகேஷ் மஞ்ச்ரேக்கர் 1987 ஆம் ஆண்டு ஆடை வடிவமைப்பாளரான தீபா மேத்தாவை மணந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள். மகள் அஸ்வாமி மஞ்ச்ரேக்கர் மற்றும் மகன் சத்யா மஞ்ச்ரேக்கர். இவர்களின் திருமண வாழ்க்கை 1995 இல் முடிந்தது, அதன் பிறகு குழந்தைகள் மகேஷுடன் தொடர்ந்து வாழ்ந்தனர்.