#BREAKING தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவிப்பு..

 
நாட்டுடைமையாக்கப்பட்ட ஏழு தமிழ் அறிஞர்களின் நூல் : தமிழக அரசு அரசாணை நாட்டுடைமையாக்கப்பட்ட ஏழு தமிழ் அறிஞர்களின் நூல் : தமிழக அரசு அரசாணை

 

 தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

தமிழகத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புவர்.  இதற்காக சிறப்பு பேருந்துகள், ரயில்களில் முன்பதிவு செய்து பலரும் முதல்நாளே பயணத்தை தொடங்குவர். குடும்பத்தினருடன் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடிவிட்டு ஊர் திரும்பும் மக்களுக்கு, பண்டிகைகள் சனி, ஞாயிறு போன்ற வாரவிடுமுறை நாட்களை ஒட்டி வந்தால் கூடுதல் மகிழ்ச்சியாகும். அந்தவகையில், இந்த  ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப்படுகிறது.  

தீபாவளி பண்டிகை

இதன்காரணமாக தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவந்தனர்.  இந்த நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 
தீபாவளியை முன்னிட்டு தமிழாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் , பள்ளி- கல்லூரிகளுக்கு நவம்பர் 1, தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.   இந்த நம்பர் 1ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9ஆம் தேதி பணிநாளாக இருக்கும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அக்.31 வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை(நவ.1) விடுமுறையை தொடர்ந்து அடுத்து வரும் வார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு) சேர்த்து இந்த ஆண்டு 4 நாட்கள்  விடுமுறை என்பதால் மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.