#BREAKING : காலையில் பயங்கரம்.. அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை காவியா வெட்டிக் கொலை..!

 
1 1

ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளி தற்காலிக ஆசிரியை காவியா வெட்டிக் கொலை.பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியை காவியாவை அஜித்குமார் என்பவர் வெட்டிக் கொலை செய்துவிட்டு தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் சரண்


தஞ்சாவூர் மாவட்டம், மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் காவியா. இவர் ஆலங்குடி அரசு தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். காவியாவும், பாபநாசம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், காவியாவிற்கு வேறு ஒரு இடத்தில் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார், இன்று வழக்கம் போல பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த காவியாவை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த காவியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த கொடூரச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, காவியாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த அஜித்குமார் அங்கிருந்து தப்பியோடாமல், பாபநாசம் காவல் நிலையம் சென்று சரணடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலைக்கான சரியான காரணம் குறித்து அஜித்குமாரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.