#BREAKING : இபிஎஸ் வீட்டில் அன்புமணி..!! உறுதியாகிறது அதிமுக - பாமக கூட்டணி?
Updated: Jan 7, 2026, 09:38 IST1767758929517
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக தலைவர் அன்புமணி இன்று (ஜன.07) சந்தித்துள்ளார். அன்புமணியுடன், பாமக வழக்கறிஞர் பாலு, திலகபாமா, பாமக சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். கூட்டணியில் பாமகவைச் சேர்க்க அதிமுக தீவிரம் காட்டிவரும் நிலையில், இபிஎஸ் - அன்புமணி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு அன்புமணி வருகை
ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வழக்கறிஞர் பாலு, திலகபாமா ஆகியோரும் வருகை


