#BREAKING : பெரும் பரபரப்பு..!! எடப்பாடி பழனிசாமி பிரச்சார கூட்டத்திற்கு வந்த நபர் உயிரிழப்பு..!!
Nov 30, 2025, 19:34 IST1764511471852
இபிஎஸ் பரப்புரையில் அதிமுக தொண்டர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோபிச்செட்டிப் பாளையத்தில் நடைபெற்றுவரும் இபிஎஸ் பரப்புரையில் பங்கேற்ற நபர் ஒருவர் உயிரிழந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. கொண்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான அர்ஜுனன், பிரசார கூட்டத்திற்கு இடையே நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


