#BREAKING : விஜயை கைது செய்யும் சூழல் வந்தால் கைது செய்வோம் - அமைச்சர் துரைமுருகன்..!
தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து கூறும் போது, 'கரூர் சம்பவத்தில் நடிகர் விஜய்க்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படாதது ஏன்? திமுக அவரை பார்த்து பயப்படுகிறதா?'' என்று கேட்கிறீர்கள். திமுக ஒரு போதும் யாரையும் பார்த்து அஞ்சியதில்லை. இனி அஞசப் போவதும் இல்லை. அஞ்ச வேண்டிய அவசியமும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு இல்லை. பாஜக உள்பட தேசிய கட்சிகளுக்கும் திமுக அஞ்சியதில்லை. எங்கள் மீது எத்தனை குற்றச்சாட்டுகள் வந்தாலும், நாங்கள் அதனை நேர்மையாக எதிர்கொள்வோம். அப்படிப்பட்ட சூழலிலும் மக்களுக்கான எங்களின் சேவையை தொடர்ந்து கொண்டு இருப்போம். கடந்த காலங்களிலும் இது தான் நடந்துள்ளது. இனியும் இது தான் நடக்கும்.விஜய்க்கு அரசியலில் போதுமான பக்குவம் இல்லை. அவர் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது'' என அமைச்சர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில், இன்று சென்னையில் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் விஜய் வெளியிட்ட வீடியோவில் , "தொண்டர்களை விட்டு விடுங்கள், என்னை கைது செய்யுங்கள் என ஒரு கட்சியின் தலைவராக விஜய் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு துரைமுருகன் பதிலளிக்கையில், அவர் கட்சியின் தலைவர். அதனால் கட்சிக்காக என்ன பேச வேண்டுமோ அதை பேசியுள்ளார். தவெக விஜய்யை, கைது செய்யும் சூழல் வந்தால் கைது செய்வோம், தேவையில்லாமல் யாரையும் கைது செய்ய மாட்டோம்" என தெரிவித்துள்ளார்.
அது போல் "விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை" என நீதிபதி விமர்சித்துள்ளாரே என்ற கேள்விக்கு துரைமுருகன், "நீதிபதி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்" என பதிலளித்தார்.


