#BREAKING : அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி..!!

 
Q Q

அமைச்சர் ஐ. பெரியசாமி, உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வயிறு தொடர்பான பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல் நிலை குறித்த முழு தகவலை மருத்துவமனை நிரவாகம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது