#BREAKING: ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் - மு.க.ஸ்டாலின்.!

 
Q Q
ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 1 லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் உள்ளன. ஓசூரில் 2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.
தொழிற்சாலைகள் ஓசூரை நோக்கி சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றன.
* ஓசூர் அறிவுசார் முனையத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
* வளர்ச்சியின் மூலம் உலக அளவில் கவனம் ஈர்க்கும் நகரமாக ஓசூர் இருக்கிறது.
ஸ்டாலின் என்றால் மேன் ஆஃப் ஸ்டீல் எனப்பொருள் என்பதால் உறுதியுடன் கூறுகிறேன். நமது சாதனைகளை நாம் தான் முறியடித்து கொண்டு இருக்கிறோம்" என கூறினார்.