#BREAKING : சீமான் தங்கியுள்ள ஹோட்டல் முன் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு! கைதாகிறாரா சீமான்?
Nov 22, 2025, 11:12 IST1763790147713
நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் மற்றும் வன உரிமைச்சட்டம் 2006 இன் படி அமைக்கப்பட்ட வன உரிமை கிராம சபை அறிவிப்பு பதாகை திறப்பு நிகழ்வு நடைபெறவிருக்கிறது என அறிவிக்கப்பட்டது
இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.மேலும்,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாதக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லையில், சீமான் தங்கியிருந்த ஹோட்டல் சுற்றி பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு புறப்பட்டால், சீமானை கைது செய்ய போலீசார் ரெடியாக இருக்கின்றனர்.


