#BREAKING : ஏர்போர்ட் மூர்த்தி மருத்துவமனையில் அனுமதி..!
Sep 8, 2025, 11:24 IST1757310844374
ஏர்போர்ட் மூர்த்தி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், எங்கள் கட்சியினர் மீது ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் 2 பேர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர். எனவே ஏர்போர்ட் மூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.
டிஜிபி அலுவலக வாசலில் விசிக நிர்வாகிகளை கத்தியை வைத்து தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை மெரினா போலீசார் கைது செய்தனர். ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஏர்போர்ட் மூர்த்தி திடீரென நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே அமர்ந்தார். இதனையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த அழுத்தத்தில் மாறுபாடு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


