#BREAKING : ஓபிஎஸ் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு..!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைவதை முன்னிட்டு, அவை வளாகத்தில் ஒரு முக்கிய அரசியல் சந்திப்பு நிகழ்ந்தது. முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து உரையாடினார். கூட்டத்தொடர் முடிவுக்கு வரும் வேளையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஓ பன்னீர் செல்வம் இன்னும் தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. இந்நிலையில் தான் ஓ ப்னனீர் செல்வம் இன்று திடீரென்று முதல்வர் ஸ்டாலினுக்கு பழக்கூடை கொடுத்து சந்தித்துள்ளார். இதனால் ஓ பன்னீர் செல்வம் திமுக கூட்டணியில் இணைகிறாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டதாகத் தெரிகிறது. கூட்டத்தொடரின் இறுதி நாளில் நிகழ்ந்த இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

