#BREAKING : மக்கள் பீதி..!அசாம், அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்..!

 
1 1

வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாமில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அருணாச்சல பிரதேசத்தின் சாங்லாங் பகுதியில் அதிகாலை 3.13 மணியளவில் ரிக்டர் அளவில் 5.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 110 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அதிர்ந்ததால், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள் அச்சமடைந்து வீதிக்கு ஓடி வந்தனர்.

அருணாச்சல பிரதேசத்தைத் தொடர்ந்து, அண்டை மாநிலமான அசாமின் மேற்கு கர்பி ஆங்லாங் பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. காலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.0 ஆகப் பதிவாகியுள்ளது. அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இயற்கைச் சீற்றங்களால் வடகிழக்கு மாநில மக்கள் பெரும் பீதிக்குள்ளாகினர். முன்னதாக, நேற்று இரவு லே லடாக் பகுதியிலும் ரிக்டர் 3.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது வடகிழக்குப் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடர் நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் சேதமடைந்ததா அல்லது உயிர்ச் சேதங்கள் ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை