#BREAKING : கோவையில் பதற்றம் : பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிப்பு..!

 
1 1

பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது உருவ பொம்மையை எரித்து "தமிழகத்தை வஞ்சிக்கும் மோடியே திரும்பி போ” என கோசம் எழுப்பிய பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கைது.

 

கோவைக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து, அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் அவினாசி சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பீகார், ஒரிசா தேர்தல் பிரசாரத்தின் போது தமிழர்களை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டி, மோடியை கண்டித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களை எழுப்பினர். தொடர்ந்து நடந்த சாலை மறியலில், மோடியின் உருவப்பொம்மைக்கு தீ வைத்ததால் அந்தப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, நற்றுக்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸார் கைது செய்தனர்.