#BREAKING : பிரபல தமிழ் சீரியல் நடிகை தற்கொலை..!!
Dec 29, 2025, 16:06 IST1767004590526
கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கௌரி. இந்த தொடரில் துர்கா, கனகா என இரட்டை வேடங்களில் நடித்து வந்தவர் நந்தினி.
பூர்வீகம் ஆந்திரா என்றாலும் கன்னட சீரியல் மூலம் நடிப்பைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. கன்னடத்தில் சில சீரியல்களில் நடித்திருந்தவர், கௌரி தொடர் மூலம் தமிழுக்கு வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்கிறார்கள்.


