#BREAKING : நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் - பிரதமர் மோடி..!
நீட் மற்றும் பிற தகுதித் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக, டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம், நாடு முழுவதும் வெடித்து பேரெழுச்சியாக மாறியுள்ளது.நாடு முழுவதும் போராட்டம் வெடித்ததால், நாடாளுமன்றம் வரை இந்த விவகாரம் சென்றது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தது. இந்த விவகாரம் தீவிரமடைந்த நிலையில், மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி வந்தனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், "வினாத்தாள் கசிவுகளில் ஈடுபட்டவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக, விரைவு நீதிமன்றங்களை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
இது தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான எங்களின் தொடர் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்” என்று தெரிவித்துள்ளார்.
நமது இளைஞர்களின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவிக்க முயற்சிப்பவர்களை தப்பிக்க விடமாட்டோம் என்றும் பிரதம அவர் குறிப்பிட்டுள்ளார்.

