#BREAKING : அவசரமாக நாடு திரும்புகிறார் பிரதமர் மோடி..!
Apr 23, 2025, 00:02 IST1745346727046
பிரதமர் மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று அங்கு சென்றார். அங்கு சென்ற அவருக்கு குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்பை பிரதமர் மோடியும் ஏற்று கொண்டார்.
இந்நிலையில், நாளை தாயகம் திரும்பும் நிலையில், காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து அவசரமாக சவுதி அரேபியாவிலிருந்து பிரதமர் மோடி நாடு திரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஸ்ரீநகர் சென்றடைந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.
காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர். சமூக வலைதளங்களில் மத நல்லினக்கத்தை குலைக்கும் வகையிலான பதிவுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


