#BREAKING : கரூர்ல நடந்த பெரும் துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என கூறினார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்
கரூரில் நடந்தது பெருந்துயரம். கொடுந்துயரம். இதுவரை நடக்காத துயரம். இனி நடக்கக் கூடாத துயரம். மருத்துவமனைக்கு நான் நேரில் போய் பார்த்த காட்சிகள் இன்னும் என் கண்ணை விட்டு அகலவில்லை. கனத்த மன நிலையிலும் துயரத்திலும் தான் இன்னும் இருக்கிறேன். செய்தி கிடைச்சதும். மாவட்ட நிர்வாகத்தை முடுக்கி விட்டு. எல்லா உத்தரவுகளைப் பிறப்பிச்ச பின்னாலும் என்னால வீட்டுல இருக்க முடியல. உடனே அன்னைக்கு நைட்டு கரூர் ஊருக்கு போனேன். குழந்தைகள், பெண்கள்னு 41 உயிர்களை நாம் இழந்திருக்கிறோம். இறந்து போனவங்க குடும்பத்துக்கு தலா 10 லட்ச ரூபாய் அறிவிச்சு அதை உடனடியா வழங்கிட்டு இருக்கோம். ஆஸ்பிட்டல்ல சிகிச்சை பெற்று வர்றவங்களுக்கு அரசு சார்பில் முழு சிகிச்சையும் வழங்கி வர்றோம்.
நடந்த சம்பவங்களுக்கான முழுமையான, உண்மையான காரணத்தை ஆராய முன்னாள் நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆணையத்தோட அறிக்கை அடிப்படையில அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன். இதற்கிடையே சோஷியல் மீடியாவில் சில வதந்திகளும், பொய் செய்திகளையும் பார்த்துட்டு தான் இருக்கேன். எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும், தன்னோட தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறக்கிறதை எப்போதும் விரும்பமாட்டாங்க.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவங்க எந்த கட்சி சேர்ந்தவர்களாக இருந்தாலும் என்னை பொறுத்த வரைக்கும் அவங்க நம்மோட தமிழ் உறவுகள். எனவே சோகமும் துயரமும் சூழ்ந்து இருக்கக்கூடிய நிலையில் பொறுப்பற்ற முறையில விசமத்தனமான செய்திகளை தவிர்க்கணும் என்று கேட்டு கொள்கிறேன். அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தும்போது இனிவரும் காலங்களில் எத்தகைய பொறுப்போடு நடந்துக்கணும் என்ற விதிமுறைகளை வகுக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை.
எனவே, நீதியரசரின் ஆணைய அறிக்கை கிடைச்ச பிறகு, எல்லா அரசியல் கட்சிகள் பொது அழைப்புக்களுடன் ஆலோசனை நடத்தி இதற்கான விதிகள், நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.அத்தகைய நெறிமுறைகளுக்கு எல்லாரும் ஒத்துழைப்பு தருவாங்கனு நம்பறேன்.
மனித உயிர்களே எல்லாத்துக்கும் மேலானது.மானுடப் பற்று அனைவருக்கும் வேண்டியது. அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனிமனிதப் பகைகள்ன்னு எல்லாத்தையும் விலக்கி வெச்சிட்டு எல்லாரும் மக்களுடைய நலனுக்காக சிந்திக்கனும்னு கேட்டுக்குறேன்.
தமிழ்நாடு எப்பவமே நாட்டுக்கு பல வகைகளில் முன்னோடியாகத்தான் இருந்திருக்கு. இது போன்ற நிகழ்வுகள் இனி எந்தக் காலத்திலும் நடக்காமல் தடுக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை.
நன்றி, வணக்கம்
கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம்.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) September 29, 2025
அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.#KarurTragedy pic.twitter.com/Ihum9qIWNY


