#BREAKING : இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம்..!!

 
Q Q

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளன. இந்தத் தொடருக்கான அணிகள் தேர்வு செய்வது குறித்து பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் அணித் தேர்வுக் கூட்டம் நடந்தது. இதன் முடிவில், இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக, தற்போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் சுப்மன் கில்லை நியமிப்பது என ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சற்று முன் ஆஸி. அணிக்கு எதிரான ODI தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கில்(கேப்டன்), ரோஹித், கோலி, ஷ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல், KL ராகுல், ஜெய்ஸ்வால், துருவ் ஜுரேல், நிதிஷ் குமார் ரெட்டி, சுந்தர், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பும்ரா, குல்தீப் யாதவ், சிராஜ், பிரசித் கிருஷ்ணா. முதல் போட்டி வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.