#BREAKING : இண்டி கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி..!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியை கடந்த மாதம் 21ஆம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வுசெய்வதற்கான தேர்தலை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், போட்டி இருந்தால், அடுத்த மாதம் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிர மாநில ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிற்கும் சூழலில், எதிர்க்கட்சிகளின் சார்பில் சுதர்சன் ரெட்டி களமிறக்கப்பட்டு உள்ளார்.
யார் இந்த சுதர்சன் ரெட்டி?
நீதிபதி ரெட்டி தனது பதவிக்காலத்தில் பல முக்கியமான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அரசியலமைப்பு கொள்கைகளுக்கு அவர் எப்போதும் முக்கியத்துவம் கொடுத்தவர். அவரது நியமனம் அனைத்துக் கட்சிகளாலும் வரவேற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், அவர் ஒரு சிறந்த நீதிபதி. மேலும், அவர் ஒருமித்த கருத்தை உருவாக்கக்கூடிய தலைவர் என்று நம்பப்படுகிறது. நீதித்துறையின் நம்பகத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தலைமை ஆகியவற்றை INDI கூட்டணி வலியுறுத்துகிறது.
ஆந்திராவைச்சேர்ந்த சுதர்சன் ரெட்டி, கடந்த 2007 முதல் 2011 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் . குவாஹாட்டி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் இருந்துள்ளார். 1946ஆம் ஆண்டு பிறந்த இவர், தற்போது 80 வயதை நெருங்குகிறார்.


