#BREAKING "அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது" - முதலமைச்சர் ‘நச்’ பதில்..

 
stalin


அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஆனால் ஏமாற்றம் இருக்காது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டப்பணிகளின் நிலை,  முடிவுற்ற பணிகளை தொடக்கி வைப்பது, புதிதாக தொடங்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிதல் என பல்வேறு இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  அந்தவகையில் ஜி.கே.எம் காலணி ஜம்புலிங்கம் பிரதான சாலையில்  புதிதாக கட்டப்பட்டுவரும் சமுதாயக் கூடத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். 

தொடர்ந்து கொளத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு தொடக்கப் பள்ளியை தமிழ்நாடு முதலமைச்ச மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் பள்ளி மாணவர்களுக்கு பேக், நோட்டு, எழுதுபொருட்கள், வாட்டர் பாட்டில் அடங்கிய பரிசுப் பொருட்களை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது, 2 நாட்களின் நானும் ஆலோசனை நடத்த உள்ளேன்” என்றார். 

udhayanidhi stalin

எப்போதும் கொளத்தூர் தொகுதிக்கே வருகிறீர்களே? என்ற கேள்விக்கு, “இது எப்போதும் என் சொந்த தொகுதி.. நம்ம வீட்டு பிள்ளை போல பார்ப்பார்கள்.. அதனால் எப்போது வருவேன்” என்று கூறினார்.  

முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்பதாக எழுப்பிய கேள்விக்கு, “அவர்களுடைய வெள்ளை அறிக்கை எப்படி இருந்தது என அனைவருக்கும் தெரியும்.. இது ஒன்றும் ஏமாற்று வேலை அல்ல..  எற்கனவே அமைச்சர் ராஜா இன்று பதில் சொல்லிருக்கிறார்.  முதலீடுகள் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட தெளிவான விளக்கமே, வெள்ளை அறிக்கைதான்.” என்றார்.  

 அமைச்சரவை மாற்றம் இருக்குமா? மற்றும் அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி தருவது தொடர்பான கேள்விக்கு ’நச்’ பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஏமாற்றம் இருக்காது..  அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்” என்று தெரிவித்தார்.