#BREAKING : சட்டப்பேரவையில் அமளி; ஸ்டாலின் vs இபிஎஸ் காரசார விவாதம் - அதிமுக வெளிநடப்பு..!!

 
Q Q

கரூர் கூட்டநெரிசல் குறித்த சட்டப்பேரவையில் நடந்துகொண்டிருந்த விவாதத்தின் போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை குறிப்பிட்டு இபிஎஸ் மீது அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் குற்றச்சாட்டு வைத்தார்.

இதைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கையின் முன் அமர்ந்து எடப்பாடி பழனிசாமி தர்ணாவில் ஈடுபட்டார்.

தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள், அரசுக்கு எதிராக முழுக்கமிட்டபடி அவர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இருப்பினும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்யவில்லை.