#BREAKING : தவெகவின் சட்டமன்ற குழு தலைவராக விஜய் தேர்வு..!

 
1

தவெக 108 இடங்களில் வென்ற நிலையில் சட்டமன்ற குழு தலைவராக விஜய் ஏகமனதாக தேர்வு என சென்னை பனையூரில் நடந்த தவெக ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வென்ற தவெக தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், இன்று (மே.5) தவெக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை பனையூர் அலுவலகத்தில் நடந்த தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விஜய் விஜய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநருக்கு விஜய் கடிதம் எழுதியுள்ள நிலையில் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


ஆளுநரிடம் ஆட்சி அமைக்க அழைக்க கோரிய நிலையில் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வையும் தனித்தனியாக அழைத்து ஒப்புதல் கடிதம் பெற்றார்  விஜய்.மேலும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய ஆதரவு கடிதத்தை எடுத்துக்கொண்டு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் தவெக தலைவர் விஜய்.