#BREAKING : தவெக தரப்பு மனுவை இன்று ஏற்க மறுப்பு - விஜய்க்கு பின்னடைவு..??
நடிகர் விஜய் கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, பாஜகவின் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் சார்பில் மனுத் தாக்கல் செய்ய இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமாரிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நீதிபதி செந்தில் குமார், உமா ஆனந்தன் தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்க மறுத்தார். இது பொதுநலன் வழக்கு என்பதால் தாமாக – அதாவது ஒற்றை நீதிபதியாக இதனை விசாரிக்க முடியாது; இரு நீதிபதிகள்தான் விசாரிக்க முடியும் என உமா ஆனந்தன் கோரிக்கையை நிராகரித்தார்.
இந்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய த.வெ.க. மனுவை இன்று ஏற்க ஐகோர்ட் கிளை மறுப்பு
தவெக மனுவை அவசர வழக்காக உடனே ஏற்க முடியாது என HC மதுரை கிளை பதிவாளர் மறுத்துவிட்டார். தவெக சார்பில் அளிக்கப்படும் மனு நாளை ஏற்கப்பட்டு, வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறும் என்றும் கூறியுள்ளார். ஏற்கெனவே, மக்களை நேரில் விஜய் சந்திக்காதது சர்ச்சையாகி வருகிறது. இந்நிலையில், HC-ம் இவ்வாறு கூறிவிட்டதால், வெள்ளிக்கிழமை வரை அவர் கரூர் செல்ல வாய்ப்பில்லை. இது விஜய் தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


