#BREAKING : மே 7ம் தேதி முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்?

 
vijay

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. 

காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. அப்போது முதல் பெரும்பாலான தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் முன்னிலை பெறத் தொடங்கினர். தவெக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தனர். நிறைவாக அந்த கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மேலும், தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.

தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தவெக, 34.92 சதவீத வாக்குகள் பெற்று புதிய சாதனை படைத்தது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை மறுநாள் முதலமைச்சராக பதவி ஏற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை காலை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 2021-ல் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியைக் குறிவைத்து விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.