'அண்ணன் இறந்த அடுத்த நொடி..' மயங்கி விழுந்து உயிரை விட்ட தங்கை!

 
ச்

வாணியம்பாடி அருகே சகோதரனின் திடீர் மரணத்தால் அதிர்ச்சியடைந்த அவரது தங்கை மயங்கி விழுந்து  உயிரிழந்துள்ளார். 


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (90). சிலம்பாட்ட வீரரான இவருக்கு 10 பிள்ளைகள் உள்ள நிலையில், சீனிவாசன் கடந்த ஒரு மாதகாலமாக உடல் நலக்குறைவால் பாதிகப்பட்டு வந்த வந்துள்ளார். இந்நிலையில் சீனிவாசன் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டின் அருகில் உள்ள சீனிவாசனின் தங்கை தவமணி (72) , அண்ணன் இறந்த செய்தி கேட்ட அடுத்த நொடியே தவமணியும் உயிரிழந்துள்ளார்.

அதனை தொடர்ந்து, அண்ணன் - தங்கை இருவரின் உடலும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு, அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். அண்ணன் இறந்த செய்தியை கேட்ட அடுத்த நொடியே தங்கையும் உயிரிழந்த சம்பவம், அக்கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.