சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை உயிரிழப்பு
சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டு காளைகள் முட்டி கொண்டதில் ஒரு காளை பரிதாபமாக உயிரிழந்தது.

திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் களம் இறக்க 775 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு காலை 8 மணி முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாடும் கால்நடை துறையினர் பரிசோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டனர். அப்போது திருச்சி மாவட்டம் திருவளர்சோலையை சேர்ந்த அப்பு என்பவரது மாடு வாடிவாசல் வழியே வந்தது. அப்போது ஏற்கனவே வெளியேறியே மாடு அப்புவின் மாட்டை முட்டியது இதில் அந்த மாடு களத்திலேயே சுருண்டு விழுந்தது.
திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை உயிரிழப்பு pic.twitter.com/fA4smmPFKk
— Publish1 (@santhoshkr41401) January 15, 2025
உடனடியாக அங்கிருந்த கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ்ஸில் அது ஏற்றப்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மாடு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


