பெரும் அதிர்ச்சி! எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் கண்டெடுப்பு!

 
tenkasi

தென்காசி அருகே குளக்கரையில் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தென்காசி அடுத்த இலத்தூர் பகுதியில் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் எரிந்த இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு வனுப்பி வைத்தனர். எரிக்கப்பட்ட இளம்பெண் யார்? கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இளம்பெண் சடலம் எரிக்கப்பட்ட இடத்திற்கு அருகே மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், மதுபோதையில் சம்பவம் நடைபெற்றதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். எரிந்த உடலுக்கு அருகே கிடந்த மதுபாட்டில்கள் , தடயங்களை சேகரித்து போலீசார் விசாரணை
 மேற்கொண்டு வருகின்றனர். குளக்கரையில் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.