கொழுத்த பணம்! குடும்ப அரசியல்! பரபரப்பை கிளப்பிய ஷோபனா ரவி..!

 
கொளுத்த பணம்! குடும்ப அரசியல்! பரபரப்பை கிளப்பிய ஷோபனா ரவி..! 

நாடாளுமன்ற உறுப்பினர்கள்  நாள்தோறும் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்வதை   முன்னாள் செய்தி வாசிப்பாளார் ஷோபனா ரவி சர்காஸ்டிக்காக விமர்சித்துள்ளார். 

1970 களில் இறுதியில் தொடங்கி நீண்ட காலம்  தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் ஷோபனா ரவி. சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வரும் அவர், அரசியல் நிகழ்வுகள் குறித்த தனது விமர்சனங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

  பட்ஜெட்  தாக்கல்!

அவர்  தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஷோபனா ரவி, “கொழுத்த பணம்! குடும்ப அரசியல்! ஒரு மணி நேரத்துக்கு மேல் மக்களவையில் உட்கார்ந்திருப்பது சலிப்பாக இருக்காதா பின்னே! எதோ ஒன்றை எதிர்க்கும்படித் தன் குழாத்தைத் தூண்டிச் சத்தம் போட வைத்து, 'அவையை விட்டு வெளிநடந்தோமா அவரவர் வேலையைப் பார்த்தோமா,' என்று கிளம்பிவிடுகிறார்கள்!  இது பார்வையாளருக்கு அப்பட்டமாகத் தெரிகிறது. தெரியட்டுமே, அதனால் என்ன? மூவாயிரம் கொடுத்தால் ஓட்டு. கொடுப்பாரோடு கூட்டணி வைத்தாலும் ஓட்டு. கூட ஜாலரா அடிக்க இருக்கவே இருக்கிறது  'போகஸ் போராளிக் கூட்டமும்' மாதக் கிம்பளம் பெரும் பத்திரிகைப் படையும்! இதே கதை தான் உலகெங்கும்!

"தர்ம சம்ஸ்தாபனார்த்தாய," என்றொருவர் சொன்னாரே, அவர் பக்கமும் சிலர் தடுமாறாமல் நின்றால் தான் தர்மம் மீளும். இல்லாவிட்டால் பூமியின் அச்சை மாற்றிக் கடலை இடம்பெயர்த்துப் புதுயுகம் படைப்பார் 'அலகிலா விளையாட்டுடையார்".” என்று குறிப்பிட்டுள்ளார்.