பேருந்து, கார் கவிழ்ந்து விபத்து... 15 பேர் காயம்! மதுரையில் பரபரப்பு

 
அஃப அஃப

மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும் காரும் முந்தி செல்ல முயற்சி செய்தபோது  தலைகீழாக கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே  மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கோயமுத்தூரில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஓட்டுநர் மார்நாடு மதுரை நோக்கி இயக்கி வந்தார். இந்த நிலையில் சமயநல்லூர் ரயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற காரை  முந்தி செல்வதற்காக அரசு பேருந்து இயக்கிய போது காரும் பேருந்தும் பக்கவாட்டு பகுதியில் மோதியது. இதனால் காரும் அரசு பேருந்தும் சாலையின் நடுவே சென்று நிலை தடுமாறி சாலையின் பக்கவாட்டு சரிவில் மோதியதில் காரும்  அரசு பேருந்தும் நிலை தடுமாறி இரண்டுமே தலைகீழாக கவிழ்ந்தது. தலைகீழாக கவிழ்ந்ததில் பயணிகள்  15க்கும் மேற்பட்டோர் தலை கை, கால்கள் என  காயமடைந்தனர் கார் ஓட்டுநரும் காயத்துடன் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனால் காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர். நேற்று டயர் வெடித்து அரசு பேருந்து இதே பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன்றும் அதே திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும் காரும் முந்தி செல்ல முயற்சி செய்தபோது அரசு பேருந்து சாலையின் பக்கவாட்டு சுவரில் மோதி காரும் அரசு பேருந்தும் கவிழ்ந்ததால் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.